எளிதில் உட்புக முடியாத இணையதள பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் உலக நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப் படும் கடவுச் சொற்கள் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளது .32 மில்லியன் கடவுச் சொற்களை ஆராய்ந்த பின் இந்நிறுவனம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது,ஆய்வு முடிவுகள் 10௦ கடவுச் சொற்களை மிகவும் மோசமான ,பாதுகாப்பு துளியும் அற்ற எளிதில் திருடப்படக் கூடிய கடவுச்சொற்கள் என அறிவித்துள்ளது.
"123456 " 32 மில்லியன் கடவுச் சொற்களில் 1 % நபர்கள் இந்த கடவுச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
"12345 " இந்த கடவுச் சொல் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தற்போதுள்ள நிலையில் சர்வதேச அளவில் ஹாக்கர்களால் மிகக் குறைந்த பட்ச முயற்சியிலேயே ஒரு புதிய அக்கவுண்டை திருட முடிகிறது.. இதற்கான காரணம் மிக எளிதான கடவுச் சொற்களே பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் இம்மோசமான நிலை நீடிக்கிறது.
மூன்றாம் இடத்தில் உள்ள கடவுச்சொல் 123456789
நான்காம் இடத்தில் உள்ள மிக அதிகமாகத் திருடப் படும் கடவுச் சொல் "பாஸ்வேர்ட் " என்பதே ஆகும்.
ஐந்தாமிடம் ...ஆறாமிடத்தில் "ஐ லவ் யூ" எனும் கடவுச் சொல்லும் "பிரின்சஸ்" எனும் கடவுச் சொல்லும் உள்ளன.
இந்த ஆய்வின் அடிப்படையில் பார்க்கும் போது கிட்டத்தட்ட 50 % பயனாளர்கள் தங்களது உறவினர்களின் பெயர்கள் அல்லது வேறு எதையேனும் பெயர்களையே கடவுச்சொல்லாக உபயோகிக்கின்றனர்,அப்படியல்லாது அப்பர் மற்றும் லோயர் கேஸ் எழுத்துக்களையும் எண்களையும் $,%,*,# போன்ற அடையாளக் குறிகளையும் கடவுச் சொற்கள் பயன்பாட்டில் கலந்து பயன்படுத்தினால் கடவுச் சொற்கள் எளிதில் திருடப் படுவதை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்
"ராக் யூ " எனும் கடவுச் சொல் ஏழாமிடத்தில் உள்ளது.
எட்டாம் இடத்தில் 1234567 எனும் கடவுச் சொல் உள்ளது .
ஒன்பதாமிடத்தில் 12345678 எனும் கடவுச் சொல்லும்
பத்தாம் இடத்தில் abc123 எனும் கடவுச் சொல்லுமாக
மொத்தம் 10 மிக அதிகமாகத் திருட்டுக்கு உள்ளாகும் கடவுச் சொற்கள் வெளியிடப் பட்டுள்ளன.
பயனாளர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் வித்யாசமான கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என இணையதள பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மேலும் கடவுச் சொற்கள் குறைந்த பட்சம் எட்டு குறியீடுகளை உடையதாக இருத்தல் வேண்டும்,ஆனால் பாதிக்குப்பாதி கடவுச் சொற்கள் ஆறு முதல் ஏழு குறியீடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்த செய்தி 60 % இணையதள பயன்பாட்டாளர்கள் குறிப்பிட்ட ஒரே வகை குறியீடுகளையே பெரும்பாலும் தொடர்ந்து பயன்படுத்திகிறார்கள்.40% இணையதள பயனாளர்கள் லோயர் கேஸ் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள் .16 % பேர் எண்களை மட்டுமே கடவுச் சொல்லாகப் பயன்படுத்துகின்றனர்.4 % குறைவானவர்களே வித்யாசமான கடினமான கடவுச்சொற்களை பயன்படுத்தி வருகின்றனர்.
RSS Feed
Twitter
6:55 AM
thupparithal

0 comments:
Post a Comment