‘துரோகி’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்த ஸ்ரீகாந்திடம், ‘‘படத்தோட தயாரிப்பாளர் யாரு?’’ எனக் கேட்டேன். ‘‘விஷ்ணுவர்த்தன் இயக்கிய ‘குறும்பு’ படத்தை தயாரித்த மனோ அக்கினேரிதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அடுத்து, அவர் புரொட்யூஸ் பண்ற படம் ‘குள்ள நரிக் கூட்டம்’.’’ என எக்ஸ்ட்ராவாக ஒரு தகவலையும் சேர்த்துச் சொன்னார் ஸ்ரீ. ‘வெண்ணிலா கபடி குழு’ விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘குள்ளநரிக்கூட்டம்’ படத்தின் டாக்கி போர்ஷன் ஷூட்டிங் முடிந்து விட்டது.
அஞ்சலி, இப்போ க்ளாமருக்கு மாறியாச்சு. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உதவியாளர் மனோஹரன் இயக்கும் ‘மகாராஜா’வில் தான் அஞ்சலி இப்படி க்ளாமர் லில்லியாக சிரிக்கிறார். ‘‘ஹீரோ சத்யாவும், அஞ்சலியும் சேர்ந்து ஆடுற டூயட் பாட்டோட ஷூட்டிங் ஹைதராபாத்தில் எடுத்தோம். பாடல் ஷூட் பண்றப்ப, அதை வேடிக்கை பார்க்க வந்தவங்களே, டான்ஸ் ஆட.. பாட்டு பெரிய்ய ஹிட் ஆகும்னு தெரிஞ்சுபோச்சுங்க’’ என்கிறார் மனோஹரன்.
‘ஆர்வம்’ ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கான டைட்டில் இது. படத்தின் ஹீரோயின் புதுமுகம் மீனுகார்த்திகாவிடம், ‘‘படத்தோட கதை என்னான்னு சொல்லுங்க, கேட்க ஆர்வமா இருக்கோம்’’ன்னு சொன்னால், மிரளுகிறார். ‘‘மதுரை அருகில் உள்ள ஒரு ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதைக் கரு.. மீதியை இயக்குநர் ஆதித்யனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்கிறார்.
‘காதல் சொல்ல வந்தேன்’ இசைவெளி யீட்டு விழாவில் ஜிலுஜிலுவென வந்திருந்தார் படத்தின் ஹீரோயின் மேக்னா. ‘வைதேகி காத்திருந் தாள்’ படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளாவின் மகள் இவர். பெங்களூரில் வசிக்கிறார் மேக்னா. ‘‘புதுமுகங்கள் பாலாஜி, மேக்னாவை நடிக்க வைக்கும் ஐடியா எப்படி வந்தது?’’ என பூபதிபாண்டி யனிடம் கேட்டால், காமெடி யாக சிரிக்கிறார். ‘‘இந்தக் கதைக்கான கேரக்டர் களுக்கு புதுமுகங்கள்தான் தேவைப்பட்டுச்சு. எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. இது காதல் கதையாக இருந்தாலும் ட்ரீட்மென்ட்டில் என்னோட ஸ்டைல் இருக்கும்.’’ என்கிறார்.
‘உனக்காக என் காதல்’ படத்தின் டைட்டிலைப் போல ஹீரோயின் ஷ்ரதாவும் அழகாக இருக்கிறார். மும்பையில் சிம்ரனின் வீட்டிற்கு அடுத்து இருக்கிறது ஷ்ரதாவின் வீடு. ‘‘நான் மும்பையில் வசித்தாலும் என்னோட பூர்வீகம் கேரளா. சின்ன வயசில இருந்தே சினிமாவில நடிக்கணும்னு ஆசை. டிகிரி முடிச்சதும் நடிக்க வந்துட்டேன்..’’ எனச் சொல்லும் ஷ்ரதா, ‘‘க்ளாமராக நடிக்க மாட்டேன்’’ என்கிறார். அப்போ, உங்கள சிம்ரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பொண்ணுன்னா எப்படி நம்ப முடியும்?
பணத்துக்காக ஆள் கடத்தல், கொலைகளில் ஈடுபடும் ஹீரோவும், ஹோட்டலில் நடனமாடும் பெண்ணும் காதல் வயப்படுகிறார்கள். இவர்கள் காதல் கைகூடியதா என்பதே ‘லவ்.காம்’ படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. பஞ்சாபி பாடகர் தலேர் மெகந்தியின் சகோதரர் மிக்கா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் ‘குத்தாட்டம் புகழ்’ முமைத்கான். தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் பற்றாக்குறையால் இனி குத்தாட்டம் ஆடும் நடிகைகளுக்கு யோகம் தான் போலிருக்கிறது!
மீனவனாகவும், பிளேபாய் ஆகவும் ஜீவா நடிக்கும் ‘சிங்கம் புலி’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது. ஸ்ரேயாவுடன் ‘ரவுத்திரம்’, கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் ‘கோ’, இதையடுத்து ‘வந்தான் வென்றான்’ என இந்த வருடத்தில் ஜீவாவுக்கு 5 படங்கள் ரிலீஸாகிறது.
ரூட் பஸ்
ஹைதராபாத்
தெலுங்கிற்கு சென்றதில் இருந்து சமந்தாவிடம் பொங்கி வழிகிறது உற்சாகம். ஹைதராபாத்தில் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அங்கே ஸ்டார் ஹோட்டல்களில் ஃப்ரெண்ட்ஸ்களுடன் பார்ட்டிக்கு செல்ல ஆரம்பித் திருக்கிறது பொண்ணு!
சென்னை
சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தின் ஷூட்டிங் சென்னை ஸ்கை வாக் ஷாப்பிங் மாலில் நடக்கிறது. பகலில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் பகுதியையும், இரவில் சூர்யா நடிக்கும் பகுதியையும் ஷூட் செய்து வருகின்றனர்.
வேலூர்
ரஜினியின் ‘எந்திரன்’ படத்தின் ஷூட்டிங் வேலூரில் நடந்தது. படத்தில் கல்லூரி மாணவர்கள் இருநூறு பேர் துணை நடிகர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பைக் கண்டு வியந்த இயக்குநர் ஷங்கர், படம் வெளியானதும் அந்த மாணவர்களுக்கென தனி ஷோ போட்டு காண்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
பெங்களூர்
பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக் குழந்தைகளுக்கு பென்சில், பேனா, ரப்பர் என ஸ்டேஷனரி பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்துவது பூஜாவின் ஹாபி!
மும்பை
இந்தியில் அக்ஷய்குமாருடன் த்ரிஷா நடித்த ‘கட்டாமிட்டா’ படம் ஜூலையில் ரிலீஸாகிறது. முனிசிபல் கமிஷனராக த்ரிஷா நடித்துள்ளார். ‘‘இதுவரை நான் நடித்த படங்களிலேயே வித்தியாசமான, சவாலான கேரக்டர் இது’’ என்கிறார் த்ரிஷா.
லண்டன்
ஜெயம்ரவி, ஹன்ஷிகா மோத் வானியை வைத்து பிரபுதேவா இயக்கி வரும் ‘இச்’ படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. தற்போது மலையாளத்தில் நடித்து வரும் நயன்தாரா, பட ஷூட்டிங்கை கட் அடித்துவிட்டு, லண்டன் சென்று திரும்பி இருக்கிறார்.
RSS Feed
Twitter
12:31 AM
thupparithal

0 comments:
Post a Comment