Adsense

Wednesday, July 21, 2010

கமலுக்கு மேலால் ஒரு நடிகை கங்கனா...


கமலின் பத்து தசாவதார கெட்-அப்க்களைப் பற்றி இன்னும் பேசிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நம்மவர்களுக்கு கங்கனா ரணாவத்தின் பன்னிரெண்டு அவதாரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நியூஜெர்ஸி பசுங்கன்று போல பளபளப்பான அழகில் ஆளை அசத்தும் கங்கனா ரணாவத், தாம்‌தூம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஜெயம் ரவியோடு டூயட் பாடியும் அந்தப் படத்திற்குப் பிறகு மீடியாவும் கண்டுகொள்ளாததில் மும்பைக்கே போய்விட்டார்.

கங்கனா போல அழகான பொண்ணுங்களை அழவைக்கக் கூடாது என்பது பாலிவுட் இயக்குனர்களின் பாலிஸி போலிருகிறது. கங்கனாவுக்கு அடுத்தடுத்து அங்கே ஆரத்தி! தற்போது கங்கனா ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் மும்பை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கங்கனாவுக்கு பன்னிரெண்டு மாறுபட்ட கெட்-அப்புகள். ஒவ்வொரு கெட்-அப்பையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகப் பன்னிரெண்டு விக்குகளைத் தயாரித்திருக்கிறார்களாம். ஒரு விக்குக்கான செலவு 50 ஆயிரம். விக்குக்கே இத்தனை செலவு என்றால் இந்த கெட்-அப்களுக்கான ஸ்பெஷல் மேக்-அப்புக்கு லட்சங்களை வாரி இறைத்திருக்கிறாராம் தாயாரிப்பாளர்.

படம் ரிலீஸ் ஆன பிறகு ஒன்ஸ் அப்பான் ய டைம் ய புரடியூஸர் லிவ்டு இன் மும்பைன்னு ஆகமா இருந்தா சரிதான்...

0 comments:

Post a Comment