Adsense

Thursday, July 15, 2010

இன்டர்நெட்டில் கை குலுக்கும் இனிமையான அனுபவம் - சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹாங்காங் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு கணிப் பொரியுடன் பொருத்தத் தக்க ரோபோ செயற்கை கரங்களைத் தயாரித்துள்ளது,இந்தக் கரங்கள் மூலம் இன்டர்நெட்டில் நம்முடன் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் மற்றும் உறவினர்குடன் கை குலுக்கிக் கொள்வது சாத்தியம் என இந்தக் குழுவின் தலைமை விஞ்ஞானி லியூ யுன்ஹீ கூறினார்.

இன்டர்நெட்டில் வெப் கேமிரா மூலம் பார்த்துக் கொண்டே உரையாடும் பழக்கம் தற்போது அதிகமாகியுள்ளது,இந்நிலையில் தாங்கள் தயாரித்த இந்த செயற்கை கரங்களை அணிந்து கொண்டு கம்பியூட்டரில் கை குலுக்கும் போது அதில் பொருத்தப் பட்ட சென்சார் பொருளால் கைகளைத் தொட்டுக் குலுக்கும் உணர்வு ஏற்படும் ,ஆனால் மனித கரங்களுக்கும் ரோபோ கரங்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதால் இன்னும் பல மாற்றங்களை செய்து மனித கரங்களைத் தொடுவதே போன்ற உணர்வை செயற்கை கரங்களிலும் கொண்டு வந்து மேம்படுத்த இருக்கிறோம் என அந்த விஞ்ஞானிகள் முழு தெரிவித்தது.

0 comments:

Post a Comment