ஒரு பக்கம் அமிதாப்பில் தொடங்கி நேற்றைய களவானி ஓவியாவரை மைக்ரோ பிளாக்கிங், சமுதாய வலைதளம் இரண்டையும் ரசிகர்களைக் கைக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் சிறந்த தொடர்பு சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதே திரையுலகில் இண்டிர்நெட் என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்ஷனாகப் பார்க்கிற நட்சத்திரங்களும் இருக்கவே செய்கிறார்கள். தமிழ்திரையைப் பொறுத்தவரை சரத்குமார், த்ரிஷா இருவருக்கும் கொஞ்சமல்ல நிறையவே அவர்ஷனாகி விட்டது. எத்தனை துணிவான பெண்ணாக இருந்தாலும் ஃபேஸ் புக், டிவிட்டருக்குள் எட்டிப் பார்க்கத் தாயாரில்லை த்ரிஷா. அதுவே ஸ்ரேயாவுக்கு டிவிட்டரில் மட்டும் 12 ஆயிரம் ஃபாலோயர்களாம்!
இப்போதைய ஹாட் செய்தி யூ ட்யூப் பற்றியது. சத்தமில்லாமல் சரத்தின் ஜக்குபாயை யூ ட்பில் நீந்த விட்டவர்கள் என்ன சந்தோஷத்தைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. இப்போது யூ ட்யூபின் ஜொள்ளர் சமுதாயம் சந்தோஷத்தில் திளைக்கிற மாதிரி மறுபடியும் ஒரு பகீர் திருட்டு! இதை ஜிலீர் திருட்டு என்றும் சொல்லலாம். தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘சாந்தி’ என்ற புதிய படத்தின் ஐந்து நிமிட ரொமான்ஸ் காட்சிகளைத் திருடி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யூ ட்யூபில் போட்டுவிட்டார்களாம். எங்கே மொத்தப் படத்தையும் போட்டுவிடுவார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறாராம் ஏ ஒன் என்டெர்யின்மெண்ட் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிப்பாளர்.
பெரும்பான்மையான காதல்கள் இன்பாச்சுவேஷனில் இருந்தே தொடங்குகின்றன. அது சரியா தவறா என்ற சூடான திரைகதையுடன் (சூடு திரைகதையிலா காட்சிகளிலா என்பது படம் வந்தால்தான் தெரியும்) அறிமுக இயக்குனர் முரளி விஷ்வா இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகி அர்ச்சனா ஒரு மும்பை மாடல், நாயகன் மகா ஆதித்தியா பெங்களுர்காரர். படத்தின் முதல் ஷெட்யூலிலேயே இருவருக்கும் நெருப்பாகப் பத்திக்கொண்டுவிட்டதாம் காதல். இதற்குக் கதையும் ஒரு காரணம் என்கிறது பட வட்டாரம். படம் முடிவடையும் தறுவாயில் இருக்க, போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளுக்காக பிலிம் பிராஸஸ் முடிந்த பிறகு, டெலிசினி செய்யக் கொடுத்த இடத்தில்தான் இந்தக் காட்சிகளை அதிரடியாகச் சுட்டு யூ ட்யூபில் விட்டுவிட்டார்களாம். முதலில் சம்பந்தபட்ட லேப் நிறுவனத்துடன் சண்டை பிடித்துக் காவல் நிலைய படியேறிய தயாரிப்பாளர், யூ ட்யூபில் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹாட்டான ஹிட்டாகிவிட்டதில் படத்துக்கு செம விளம்பரமாகிவிட, இப்போது சைலண்டாகிவிட்டாராம். ஆனால் சம்பந்தப்பட்ட காட்சிகள் யூ ட்யூபில் வெளியான விவகாரம் நாயகி அர்ச்சனாவுக்குத் தெரிந்துவிட, மிச்சப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முறுக்கிக்கொண்டு போயேவிட்டாராம் மும்பைக்கு. அவரை சமரசம் செய்ய மும்பை விரைந்திருப்பது இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல! பிறகு? ஹீரோ மகா! ஆஹா!
RSS Feed
Twitter
3:11 AM
thupparithal

1 comments:
எல்லாமே திருட்டுதான்........
Post a Comment