Adsense

Wednesday, July 7, 2010

பிரபல இயக்குனரின் மனைவியிடம் மாட்டிக்கொண்ட உலக அழகி...

சுஹாசினிக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டதாம். இதன் விளைவாக விரைவில் ஐஸ்வர்யா ராயை வைத்து சுஹாசினி ஒரு படத்தை இயக்கலாம் என்ற அளவுக்கு செய்திகள் கிளம்பி விட்டன.

மணிரத்தினத்துடன் நல்ல நட்பு பாராட்டுபவர் ஐஸ்வர்யா ராய். அவரை மணந்து கொண்ட பின்னர் அபிஷேக்கும், மணிரத்தினத்தின் நெருங்கிய நண்பரானார். இந்த நிலையில் தற்போது இந்த இருவருக்கும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளாராம் சுஹாசினி.

நீண்ட நாட்களாகவே சுஹாசினிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே நட்பு இருந்தாலும் கூட ராவணன் படத்தின்போதுதான் இந்த நட்பு இறுகியதாம். இதன் விளைவாக விரைவில் ஐஸ்வர்யா ராயை வைத்து சுஹாசினி ஒரு படம் இயக்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

சுஹாசினி குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், சுஹாசினியுடன் எனது நட்பு மேலும் மேம்பட்டுள்ளது. அதேபோல அபிஷேக்கும் கூட நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளார். எங்களது நட்பு அடுத்து எந்தக் கட்டத்துக்குப் போகப் போகிறது என்றுதான் இப்போதெல்லாம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்றார்.

நட்பா இருந்தா நல்லதுதானே..


உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கும் ஒரே இணையதளம்...

0 comments:

Post a Comment