Adsense

Thursday, July 15, 2010

சரத்குமாரை எதிர்க்க துணிந்த ராதாரவி... அசின் மீது நடவடிக்கை உறுதி என் ராதாரவி கூறியுள்ளார்...

``நடிகை அசின் தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பின் உத்தரவையும், கட்டுப்பாட்டையும் மீறி இலங்கை சென்றுள்ளதால் அவர் மீது நடவடிக்கை உறுதி`` என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி தெரிவித்தார்.

நடிகை அசின் `ரெடி" இந்திப்பட படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார்.

``இலங்கையில் தமிழினத்தை அந்நாட்டு அரசு கொன்று வரும் நிலையில் தமிழ்த்திரையுலகினர் யாரும் இலங்கை செல்லக்கூடாது குறிப்பாக அங்கு படப்பிடிப்பில் பங்கேற்கக்கூடாது`` என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் அசின் இந்த தீர்மானத்தை மீறி இலங்கை சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இலங்கை அதிபரின் மனைவியுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அசின்னை கண்டித்து தமிழ்த் திரையுலகினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கு பதில் அளித்த அசின்...``விளையாட்டு வீரர்களுக்கு எந்த எதிர்ப்பு காட்டாதவர்கள் நடிகர்கள் என்றால் ஏன் எதிர்க்கிறார்கள், இதில் என்ன நியாயம் இருக்கிறது."என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அசின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ராதாரவியிடம் கேட்ட போது....``அரசின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் ஏற்கனவே கலந்து ஆலோசிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment