செல்போன்களின் பெருக்கம் இன்று அளவிடற்கரியது.குடும்பத்தின் அனைத்து நபர்களுமே தலிக்கொரு செல் போன் உபயோகிக்கும் காலம் இது ,இதில் குடும்பத்துக்கு ஒரு செல் ,அலுவலகத்துக்கு ஒரு செல் என சிம்களை மாற்றிப் போட்டு உபயோகிப்பவர்களும் உண்டு.
இப்படி செல் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க செல்லுக்கு சக்தி அளிக்கும் பேட்டரிகளின் தேவையும் அதிகரித்துள்ளது.செல் வாங்குபவர்கள் அதற்கான பேட்டரி வாங்குகையில் அதன் தரத்தை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.பேட்டரிகளின் நீடித்து உழைக்கும் தன்மை பயனாளர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து இடங்களிலும் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதிகள் இருப்பதில்லை,அம்மாதிரிச் சூழ்நிலைகளை சமாளிக்க சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரிகள் தயாரிக்கப் பட்டு சந்தைக்கு வந்தன.கூடுதலாக தானாவே சார்ஜ் ஆகிக் கொள்ளும் வசதி கொண்ட தானியங்கி பேட்டரிகளை நோக்கியா நிறுவனம் புதிதாக வடிவமைத்து இருக்கிறது.
இந்த பேட்டரிகள் செல்போன்கள் அசையும் போது தானாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும் தன்மையுடன் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளன என்பது இதில் உள்ள கூடுதல் அம்சம் .
அசையும் தன்மை கொண்ட `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குமாம் .ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, July 14, 2010
தானாகவே சார்ஜ் ஆகும் பேட்டரிகள் கொண்ட அலைபேசிகள் அறிமுகம்
5:55 AM
thupparithal
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment