கூகிளின் க்ரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமானது அனைத்து செயல்களையும்
இணையத்தின் மூலமே பயன்படுத்தக்கூடியதாக தயாரித்துவருகிறது. உதாரணமாக
நீங்கள் ஒரு கோப்பை ஒருவருக்கு மெயிலில் இணைத்து அனுப்பி அதனை அவர்
தரவிறக்கி திறப்பதற்கு பதிலாக கூகிளின் டாக்குமெண்ட் பகுதியில் இருந்து
நேரடியாக பகிர்ந்து கொள்ளமுடிகிறது. அதுபோல புதியதாக க்ரோம்
ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் மூலம் பிரதி எடுப்பதை எளிதாக்க கூகிள் க்ளவுட்
பிரிண்டிங் எனும் முயற்சியை எடுத்திருக்கிறது.
ஐபாட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் போன்றவைகளும் இணையப்பயன்பாட்டை
கைப்பேசியிலே இருந்தே அதிகம் பயன்படுத்துவோர் பெருகிவரும் இவ்வேளையில்
நேரடியாக அவற்றின் மூலம் பகிரப்பட்ட கோப்புகளை பிரிண்ட் செய்வதற்கு
அதற்கான ட்ரைவர்கள் பொருத்தப்பட்ட ஒரு கணினியின் துணை தேவைப்படுகிறது.
இதற்காக க்ளவுட் தொடர்புகொள்ளும் பிரிண்டர்கள் (cloud aware printers)
என்பவை முன்பே க்ளவுட் பிரிண்ட் செயல்களுக்காக பதிவு
செய்யப்பட்டிருந்தால் கணினியின் துணையில்லாமலேயே நேரடியாக பிரிண்ட்கள்
செய்வது சாத்தியப்படும் என்பதே இந்த முயற்சியின் குறிக்கோளாகும்.
இந்த க்ளவுட் பிரிண்டிங் முறையானது இன்னும் மேம்படுத்தவேண்டியதாகும்.
தற்போது இருக்கும் பிரிண்டர்கள் க்ளவுட் பிரிண்டராக வேலை செய்வதற்கான
ஒன்றாக மாற்றப்படவேண்டிய வேலை என்பது ஒரு தடையாகும்.க்ளவுட்
தொடர்புகொள்ளும் ப்ரிண்டர்கள்
என்பதும் புதிதாக உருவாக்கப்பட்டு அனைவரும் பயன்படுத்த தொடங்கவேண்டுவது
போன்ற வேலைகள் உள்ளன. தொடர்ந்து கூகிள் அதற்கான வேலைகளை செய்துவரும் என
கூகிள் க்ரோமியம் தளம் அறிவிக்கின்றது.
கூகிள் டாக்குமெண்டைப் போலவே கூகிள் ப்ரிண்டரையும் கூகிள் கணக்கின் மூலம்
நண்பர்கள் ,குடும்பம் மற்றும் வேலையிடங்களின் தொடர்புகொள்பவர்களுடன்
பகிர்வது எளிதாக இருக்கும்.க்ளவுட் பிரிண்டிங் பற்றி முன்பே HP நிறுவனம்
முயற்சிப்பதாகச் சொன்னாலும் கூகிள் தான் முதல் முயற்சியைத்
தொடங்கிவைத்திருக்கிறது.
Thursday, July 15, 2010
கூகிள் க்லோட் பிரிண்டிங்
2:08 AM
thupparithal
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment