டெல்லி: திடீர் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது மனைவி ஷாக்சியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தார்.
10, ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
ராகுலை சந்திக்க முன்பே அனுமதி பெறப்பட்டிருந்ததாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் டோணி தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நடிகை பிபாசா பாசுவும் அவருடைய காதலர் நடிகர் ஜான் ஆபிரகாமும் இணைந்து டோணி தம்பதிக்கு நாளை மும்பையில் விருத்து கொடுக்க இருப்பதாக வந்த தகவ்லகளை பிபாசா மறுத்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் எழுதிருப்பதாவது: டோணி தம்பதிக்கு விருந்து கொடுக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் நாளை விருந்து எதுவும் தரும் திட்டமில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக அவர்களுக்கு மிகச் சிறப்பான விருந்து கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

பிபாசா பாசுவின் அரை நிர்வாண வீடியோக்காட்சி...
RSS Feed
Twitter
2:43 AM
thupparithal

0 comments:
Post a Comment