Adsense

Wednesday, July 14, 2010

தாய் பேசினால் குழந்தைகளின் அறிவுத் திறன் வளரும்..! ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

தற்போதையச் சூழலில் குழந்தைகள் விளையாடுவதற்காக அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இது எல்லாவற்றையும்விட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தபடியே வந்தாலே குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத் திறன் வளர்வதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சி பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள்.

அந்த குழந்தைகளிடம் அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி அவர்களின் தாய்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். கூடவே, மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின் பெயர்களையும் கற்றுக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களைப் பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கியுள்ளனர். மேலும் பல படங்களைப் பார்த்ததுமே அவற்றின் பெயர்களையும் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், அவர்களின் அறிவுத்திறன் வளரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment