Adsense

Monday, July 12, 2010

உலக அழகியின் செயலில் திருப்தி அடைந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...

எந்திரன்`` படப்பிடிப்பில் நடந்த முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பேசப்படப்போகிறது இந்த சம்பவம். ஆமாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஷங்கரின் ``எந்திரன்" படப்பிடிப்பில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாக ராவ் நடித்த பாடல் காட்சியுடன் நிறைவடைந்த எந்திரன் படப்பிடிப்புக்கு பின் நடந்த சம்பவம் படக்குழுவினரையும் ரஜினியையும் நெகிழச் செய்துள்ளது. ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்து முடித்ததும். படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குநர் சங்கர் அறிவித்தார்.

இதனால் சோகமான படக்குழுவினர் ஒருவரை ஒருவர் தழுவி பிரியாவிடை கொடுத்துக்கொண்டனர். அதே நேரம் ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்த் எதிரில் வந்து நின்று திடீரென காலில் விழுந்து ஆசீவதிக்கும் படி கோரியுள்ளார்.

இதை எதிர்பாராத ரஜினி, என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு நெகழ்ச்சியோடு ஐஸ்வர்யா ராயை ஆசிர்வதித்து `நீயும் எனக்கு மருமகள் மாதிரிதான் வாழ்க வளர்க" என்று வாழ்த்தியுள்ளார். இதை பார்த்த படக்குழுவினரும் நெகிழ்ந்து போயினர்

0 comments:

Post a Comment