Adsense

Thursday, July 15, 2010

விஜய் ரசிகர்களின் அழப்பறையை கட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை...


எத்தனை கோடி என்றாலும் அலுத்துக்கொள்ளாமல் படம் எடுக்கிற பசையான தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி! 100 கோடியில் ஜாக்கி சானை வைத்து ஹாலிவுட் படமெடுக்கத் திட்டமிட்டுவரும் இவர், தனது நிறுவனம் ஆசை ஆசையாய்த் தயாரித்த இரண்டு படங்களை அப்படியே ஆஃப் மோடில் வைத்திருகிறார். லீலை, மாஸ்கோவின் காவேரி ஆகிய அந்த இரண்டு பட இயக்குனர்களும், தங்கள் முதல் படைப்பைப் போஸ்டரில்கூடப் பார்க்க முடியாத பரிதவிப்பில் இருக்க, விஜயை வைத்து வேலாயுதம் படத்தைத் தொடங்குகிறார் இன்று.

விஜய் ஹீரோவாக நடித்து ஜெயம் ராஜா இயக்கப் போகும் இப்படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள வெளியூர் ரசிகர்களைத் திரட்டியிருகிறார்கள் அவரது ரசிகர் மன்றத் தரப்பில். இதனால் திருச்சி மதுரையில் இருந்து வேன்களில் நேற்றிரவே அவரது ரசிகர்கள் வர, அவர்களது வாகனங்களை மறிக்கவோ அவர்களோடு தகறாறு செய்யவோ கூடாது, கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று திருச்சி, மதுரை மார்க்கக் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறைக்கு ஹெட் குவாட்டர்ஸில் இருந்து ஸ்பெஷல் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் க்ரைம் பீட் வட்டாரத்தில். இதை உறுதி செய்வது போல ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போகிற மாதிரி ரசிகர் மன்றக் கொடிகளைக் கட்டிக்கொண்டு வெளியூர் ரசிகர்களும் நேற்றே வேன்களில் ஊர்வலம் வந்தார்களாம். நல்லவேளையாக வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருகிறார்கள்.

ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீமேக் பிரியர்கள் என்பது தமிழகம் அறிந்த தகவல். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது இந்த ஐடியா காலை வாரிவிட்டாலும், ராஜாவுக்கு ரீமேக் ராசி நன்றாகவே வேலை செய்கிறது. அந்த வகையில் ராஜா இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் கதையும் ரீமேக்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் இயக்கிய ஆசாத் என்ற படத்தைத் தழுவித்தான் இந்த வேலாயுதத்தை உருவாக்கப்போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ணத்தைப் பிட்டுப் பிட்டுப் பிசைந்த படம்தான் ஆசாத் என்கிறது டோலிவுட் வட்டாரம்.

எப்படியோ தொடர் தோல்விகளால் தியேட்டர் அதிபர்கள், எக்ஸிபிட்டர்களின் கசப்பை சம்பாதிதிருக்கும் விஜய்க்கு ஒரு அதிரடி வெற்றி கிடைத்தால் இண்டஸ்ட்ரியில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே...

0 comments:

Post a Comment