Adsense

Friday, July 16, 2010

மதராசப்பட்டிணம் பார்த்து கண்கலங்கிய கருணாநிதி...


ஆர்யா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மதராசப்பட்டினம் படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்தார்.

ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவான படம் மதராசபட்டினம். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தை முதல்வர் கருணாநிதி போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி படத்தைப் பார்த்து ரசித்தார். அவருடன் துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரனும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். உதயநிதிதான் மதராச பட்டினம் படத்தை வாங்கி விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் ஆர்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படத்தைப் பார்த்த பின்னர் ஆர்யாவின் நடிப்பை முதல்வர் பாராட்டினார்.

0 comments:

Post a Comment