``இலங்கையில் நடைபெற்ற திரைப்படவிழாவை தமிழ்த்திரைப்படக் உலகம் புறக்கணித்தது சரியானதுதான்" என்று ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே ஆதரவுடன் இலங்கை சுற்றுலாத்துறை கடந்த மாதம் நடத்திய திரைப்படவிழாவை தமிழ்த்திரையுலகம் முற்றிலுமாக புறக்கணித்தது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு நடத்தும் திரைப்படவிழாவில் பங்கேற்பத்தில்லை என்று தமிழ்த்திரையுலகத்தினர் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்து அவ்விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்திவரும் தமிழக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஐரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றுள்ளார். அங்கு ஊடகத்தினரை சந்தித்த அவர் இலங்கை திரைப்படவிழாவை புறக்கணித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்
அதில்.....``இலங்கையில் நடந்த IIFA நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான் தமிழர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம், மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். "என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
RSS Feed
Twitter
3:22 AM
thupparithal

0 comments:
Post a Comment