Adsense

Wednesday, July 14, 2010

தலையுடன் ஆட்டம் போட தயார்... நீத்து சந்திரா...

ஆடித் தள்ளுபடியில் மொத்த ரசிகர்களும் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்க, தல அஜித்தின் ரசிகர்கள் மட்டும் எப்போடா இந்த ஆடிமாசம் போகும் என்று வெறித்தனமாக்க் காத்துக்கொண்டிருகிறார்கள்! காரணம் மங்காத்தா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஆடி முடிந்ததும் அறிவிக்கிறார் தயாநிதி அழகிரி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்திய அமைச்சர் அழகிரியும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தல வட்டாரத்தில் இருந்து தகவல். இதை விட ஹாட்டான ஒரு செய்தி, ஆமீர், சாருவுடன் ஆடி முடித்திருக்கும் நீத்து ஒரு முக்கிய கேரக்டரில் தலயுடன் நடிப்பதோடு ஒரு பாடலுக்கு ஆடவும் ஒத்துக்கொண்டிருப்பதாக வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய தரப்பிலிருந்து செய்தி கசிகிறது. அனுஷ்கா தரப்பில் இன்னும் உறுதியாகச் சொல்ல வில்லையாம். இதனால் கதாநாயகி எந்த நேரத்திலும் மாறலாம் என்கிறார்கள்.
தலயுடன் நடிக்க அனுஷ்கா அட்ஜஸ்ட் பண்ணி கால்ஷீட் தரலேன்னா நஷ்டம் அனுஷ்காவுக்குத்தான் என்று அலட்டாமல் சொல்கிறார்கள் தலையின் தலைமை மன்றத்தில்!

0 comments:

Post a Comment