லாஸ் ஏஞ்சல்ஸில் லஞ்ச், கலிபோர்னியாவில் காப்பி, லண்டனில் டின்னர் என்று பறந்து பறந்து பந்தா பண்ணும் ஸ்டைல் பாலிவுட் ஹீரோக்களின் முத்திரை. நம்ம சிம்புவும் இந்த் விஷயத்தில் லேசுப்படவர் இல்லை. போடா போடி படத்தின் கதை விவாதத்தை இயக்குனரான தனது நண்பர் விக்கி என்கிற விக்னேஷ் சிவாவுடன் டொரொண்டோவில் நடத்தினார்! பொதுவாகத் துணை நடிகர்களுக்குச் சென்னையில் தேர்வு நடத்துவதுதான் வழக்கம். ஆனால் போடா போடி படம், பாலே நடனத்தைக் கதைக் களமாகக் கொண்டது என்பதால் ஐரோப்பா முழுக்க பாலே நடனம் தெரிந்த இளைஞர்களையும் யுவதிகளையும் லண்டனின் பேய்ஸ்வாட்டரில் வைத்து ஆடிஷன் செய்திருகிறார்கள் சிம்புவும் சிவாவும்.
இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. போடா போடி படத்தில் தனது கேரக்டருக்கு பயண்படுத்தத் தேவையான மொத்த ஆடைகளையும் பாங்காக்கில் தேர்வு செய்திருகிறார். போடா போடியில் தனக்கான ஹேர் ஸ்டைலை டொரண்டோவின் புகழ் பெற்ற அழகு நிலையமான டோனி அண்ட் கையில் டிசைன் செய்து பார்த்திருக்கிறாராம்.
போடா போடி படப்பிடிப்பு முதல் பத்து நாட்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது வேதம் தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான வானத்தில் பரபரப்பாக நடித்துகொண்டிருகிறார் சிம்பு. படப்பிடிப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடந்துவருகிறது. வி.தா.வ.வுக்குப் பிறகு சிம்புவின் இமேஜ் சாக்லேட் பாயாக மாறியிருந்தாலும் செய்தியாளர்களிடம் மட்டும் முறைத்துக்கோண்டே திரிகிறார் இந்த இந்த யங் சூப்பர் ஸ்டார். காரணம் என்ன என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தால், “நான் ஏதோ தமன்னாவுக்காக அலைகிற மாதிரி செய்தி போடுகிறார்கள்” என்று சொல்கிறாரம்.
விட்டுப்பிடிங்க சிம்பு! அவங்களுக்கு நியூஸ் வேனாமா?
RSS Feed
Twitter
2:32 AM
thupparithal

0 comments:
Post a Comment