Adsense

Wednesday, July 14, 2010

மெக்அஃபி ஆன்ட்டி வைரஸ் கணினிகளை முடக்கியது

கணினி பாதுகாப்புக்கு சிறந்த ஒன்று என்று பெயர் வாங்கிய மெகாஃபி ஆன்ட்டி
வைரஸ் இவ்வாரத்தில் புதிய அப்டேட் ஒன்றின் போது தனது
வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலை உருவாக்கிவிட்டதற்காக
மன்னிப்பு கேட்டிருக்கிறது.அப்டேட் செய்யப்பட்ட புதிய டாட் ஃபைல் ஒன்றின்
காரணமாக பள்ளிகள் , மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என இந்த
ஆன்ட்டி வைரைஸை பயன்படுத்தும் பலர் இதனால் கடுமையாக
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விண்டோட்ஸ் எக்ஸ் பி கணினிகள் இதனால் க்ராஷ் ஆகுவதும் மீண்டும்
மீண்டும் ரீ பூட் ஆகுவதுமாக இருந்திருக்கின்றன. SVCHOST.EXE என்கிற
விண்டோஸ் கோப்பை தவறான வைரஸ் என்று ஆன்ட்டி வைரஸ் கணக்கில் எடுத்தால்
நிகழ்ந்த தவறை நிவர்த்தி செய்ய சூப்பர் டாட் ரெமிடேசன் டூல் என்ற ஒன்றை
உடனடியாக தயார் செய்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தளத்தின் உதவியை
நாடியதால் வேறு ஒரு தனித்தளத்தில் எவ்வாறு கணினிகளை மீட்டெடுக்க வேண்டும்
என தகவல்களை பதிவிட்டது.

தவறு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே விரைவாக சரிசெய்யப்பட்டிருந்தாலும் இது
நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கக்கூடிய செயலாகும். பாதிக்கப்பட்ட
கணினிகளான விண்டோஸ் எக்ஸ்பி எஸ் பி த்ரீ மாடல்ககளின் மீது தங்கள் புதிய
கோப்பை பரிசீலிக்காமல் விட்டதால் தவறு நிகழ்ந்ததாக கூறி இருக்கிறார்கள்.
சன் பெல்ட் மென்பொருளாளர்கள் மெகஃபியின் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை
கவர ஆறுமாத இலவச பாதுகாப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால்
அவர்களூம் இதுபோன்ற தவறுகள் நிகழாது என உறுதி கூறமுடியாது.

0 comments:

Post a Comment