இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி பற்றி
சிலமாதங்களுக்கு ஒருமுறையாவது, ஒரு குறிப்பிட்ட புள்ளி விவர பட்டியல் நம் பார்வைக்கு வந்துவிடுகிறது. அது எப்படி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி எவ்வாறு மற்ற உலாவிகளிடம் தோல்வியடைந்து, தனது சந்தை மதிப்பை, பயனாளர்களை இழக்கின்றது என்பது பற்றியதாகும். நாம் பொதுவாகவே, கொஞ்சம் உள்ளூர மகிழ்ந்துகொண்டே பகிர்ந்துகொள்ளும் செய்தியாகும். ட்விட்டர், டிக் போன்ற சமூக வலைப்பின்னல்களின் பயனர்களும், தொழில்நுட்ப வலைப்பதிவுகளின் நடத்துனர்களும் `இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவி இறந்துவிட்டது` போன்ற சொல்லாடல்களை உபயோகித்து இதனை மகிழ்வோடு பகிர்கிறார்கள். இவை அனைத்தும் உண்மை அல்ல என்று மறுப்பதற்கில்லை. உலாவி சந்தையில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது பயனர்களை இழந்துவருவதில் உண்மை இருக்கிறது. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இறந்துவிட்டது என்று இந்த வாரம் வழமையை விட சற்றே அதிகமாக நம்மை வந்தடைந்த ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் புள்ளி விவரங்கள் சொல்வது இது தான். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலகில் தனது சீர்மையை இழந்துத்தான் நிற்கிறது. ஆனால் இன்னும் செய்தி இருக்கிறது. ஐரோப்பிய பயனர்களுக்கு எந்த உலாவி விருப்ப தேவை என்ற பயனர்களே தங்கள் உலாவியை தேர்வு செய்யும் தேர்வு முறையை கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் அழுத்தப்பட்டது என்பது உண்மை. இதை ஐரோப்பிய யூனியனின் சில சட்ட திட்டங்கள் ஒழுங்கு செய்தன...
Wednesday, July 14, 2010
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சோதனை முயற்சிகளும் பெருந்துன்பங்களும்
10:04 AM
thupparithal
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment