இலங்கையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகை அசினும் இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனியும் சந்தித்து பேசினர்.
இருவரும் விளம்பரப் படமொன்றில் சேர்ந்து நடித்ததன் மூலம் நெருங்கிய நண்பர்களாகினர். இதன் காரணமாக டோனி மும்பையிலுள்ள அசின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் அளவிற்கு இருவரும் நெருங்கிய நட்பு பாராட்டிவந்தனர். இந்நிலையில் டோனிக்கு அவரின் பள்ளித் தோழி சாக்ஷியோடு திருமணம் நடந்துள்ளது. இந்த அவசரத் திருமணத்திற்கு அசின், டோனி இடையிலான நட்பே காரணம் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் “ரெடி” இந்திப் படத்திற்காக இலங்கை சென்றுள்ள அசின் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலிலேயே இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக சென்றிருந்த டோனியும் தங்கிருந்தார். இந்த சூழ்நிலையில்தான் இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து நடிகை அசினிடம் கேட்டப்போது அவர் கூறியவதாவது: “இலங்கையில் இருந்து நேற்றுதான் மும்பை வந்தேன். நான் தங்கியிருந்த ஓட்டலில் டோனி தங்கியது உண்மைதான். நாங்கள் இருவரும் நண்பர்கள். அவரின் திருமணத்திற்கு செல்லவில்லை. அவரை நேரில் சந்தித்து வாழ்த்தலாம் என்று இருந்தேன். அவரே இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரைச் சந்தித்து திருமண வாழ்த்து கூறினேன். அந்த ஓட்டலில் அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியினரும் இருந்தனர். “ரெடி” படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் முடிந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு மும்பையில் நடக்கவிருக்கிறது. விஜய்வுடன் நடிக்கும் “காவல் காதல்” படத்திற்காக அடுத்த மாதம் சென்னை வருவேன்” என்று கூறினார்.
RSS Feed
Twitter
5:14 AM
thupparithal

0 comments:
Post a Comment