Adsense

Wednesday, July 21, 2010

அஜித்தின் மங்காத்தாவுக்கும் வச்சாச்சு ஆப்பு...


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் “மங்காத்தா”. இந்த படத்தலைப்பு தன்னுடையது என்றும் அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் போர்கொடி தூக்கியுள்ளார் தயாரிப்பாளர் மனோ அக்கினேனி.

அஜித்தின் ஐம்பதாவது படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டு படத்திற்கு “துப்பறியும் ஆனந்த்” என்றும் பெயரிடப்பட்டது. இந்நிலையில் கார் ரேஸ்க்கு அஜித் சென்றுவிட எப்போது படத்தின் வேலைகள் தொடங்கும் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போவது கவுதம் இல்லை வெங்கட் பிரபு என்றும் படத்தின் பெயர் “மங்காத்தா” என்றும் உறுதி செய்யப்பட்டதும் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதுகலித்தனர்.

இந்நிலையில்தான்  “மங்காத்தா” தலைப்பு தனக்கு சொந்தமானது என்று “குறும்பு” படத்தைத் தயாரித்தவரும், ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்னுவை வைத்து “துரோகி” என்ற படத்தைத் தயாரித்து வருபவருமான தயாரிப்பாளர் மனோ அக்கினேனி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியவதாவது: அஜித் படத்திற்கு “மங்காத்தா” என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. “மங்காத்தா” தலைப்பு என்னுடையது. வரும் காலங்களில் படங்கள் தயாரிப்பதற்காக சில படத்தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். அதில் “மங்காத்தா” தலைப்பும் ஒன்று. இதே தலைப்பில் படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளேன். எனவே அந்த தலைப்பை அஜித் படத்திற்கு பயன்படுத்தக்கூடாது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் படத்தலைப்பு குறித்து அஜித்தே நேரடியாக தொலைபேசி மூலம் மனோ அக்கினேனியுடன் பேசியுள்ளாராம். அதற்கு மனோ அக்கினேனியின் ரியாக்‌ஷன் என்னவென்று இனிதான் தெரியவரும்.

0 comments:

Post a Comment