Adsense

Tuesday, July 13, 2010

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் எந்திரன் இசை வெளியீட்டு விழா...

இது வரை தமிழ்ப்படம் எதற்கும் இவ்வளவு பிரமாண்ட இசை வெளியிட்டு விழா நடைபெறவில்லை என்று சொல்லும் அளவுக்கு ``எந்திரன்" பாடல்கள் வெளியிட்டுக்கு பிரமாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மலேசியாவின் கோலாலம்பூரில் ஜூலை-31 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட இந்திய திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளார்கள்.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரையும் பங்கேற்கவைக்க முயற்சி நடைபெற்றுவருகிறது. இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளை எச்.பி.ஓ. நிறுவனம் செய்துவருகிறது.

இந்த நிறுவனம்தான் ``எந்திரனு"க்கான வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment