Adsense

Friday, July 9, 2010

ஆடை குறைத்தும் நடிகைமேல் திருப்திபடாத இயக்குனர்...


இயக்குனர் ஷங்கரின் உதவியாளரும், ‘சிந்துநதி பூ’, ‘சேரன் சோழன் பாண்டியன்’ படங்களை இயக்கியவருமான செந்தமிழ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ஜெயமுண்டு பயமில்லை. இப்படத்தை பி.சி.பாலு கதை எழுதி தயாரிக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆதித்யா அன்பு. இவர் ‘தம்பியுடையான்’ படத்தி்ல கதாநாயகனாக நடித்தவர். ‘வால்மீகி’ படத்தில் அறிமுகமாகி தற்போது ‘நெல்லை சந்திப்பு’ படத்தில் நடித்து வரும் தேவிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக கன்னடத்தில் ஆறு படங்களில் நடித்த பிரியங்கா நடிக்கிறார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு மீனவக் குடும்பம்தான் இப்படத்தின் கதைக்களம். அந்த கிராமத்துக்குச் சேர வேண்டிய சுனாமி நிவாரண நிதி கிடைக்கப்பெறாமல் அம்மக்கள் வெகுண்டெழுகிறார்கள். அவர்களின் போராட்டம், அது தொடர்பான சம்பவங்களும் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தக் கூடிய இப்பிரச்சனை மற்ற படங்களிலிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக இருக்கும். படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழலே வில்லனாக அமைந்து படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் தேவிகா, பிரியங்கா இருவருக்கும் கிளாமரான உடைகள் தரப்பட்டது. பிரியங்கா அதை அணிந்துகொண்டார். நீச்சல் உடையை போல இருப்பதாக கூறி அதை அணிய தேவிகா மறுத்துள்ளார். ‘இவ்வளவு கவர்ச்சியாக என்னால் உடை அணிய முடியாது' என தேவிகா சொன்னாராம். கோபம் அடைந்த இயக்குனர் செந்தமிழ், ‘பாடல் காட்சியில் மற்ற பெரிய நடிகைகளே இப்படி நடிக்கிறார்கள். இது போன்ற டிரஸ் அணியமாட்டேன் என்றால் ஏன் சினிமாவுக்கு வருகிறீர்கள்?' என நறநறக்க தேவிகா அந்த உடையை அணிய மறுத்து, ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சென்றுவிட்டாராம். இதையடுத்து அவருக்கு கவர்ச்சி குறைவான உடைகள் வரவழைக்கப்பட்டு அந்த உடையை காட்டியபிறகே மறுநாள் அந்த பாடல் காட்சியில் தேவிகா நடித்தாராம்.



டீவி நிகழ்ச்சிகளை உடனுக்குடன் உயர்தரத்தில் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்...

0 comments:

Post a Comment