‘ரெடி’ இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக அசின் இலங்கை சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கண்டனம் தெரிவித்ததுடன் அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அசின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, இம்மாதம் 30-ந்தேதி நடக்க உள்ள நடிகர்சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
அசின் தற்போது விஜய் ஜோடியாக நடித்துள்ள “காவல் காதல்” படத்தில் நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே படத்தின் ரிலீசுக்கு முன்பே அசின் பிரச்சினையில் தீர்வு ஏற்படவேண்டும் என்று தயாரிப்பு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே நடிகர் சங்கத்துக்கு தனது நிலையை விளக்கி அசின் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் படப்பிடிப்பை நடத்துவது தயாரிப்பாளரின் முடிவு. அப்படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் மீறி செயல்பட முடியவில்லை. எனவேதான் இலங்கை படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நடிகர் சங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என்று அசின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாராம்.
அசின் தற்போது விஜய் ஜோடியாக நடித்துள்ள “காவல் காதல்” படத்தில் நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே படத்தின் ரிலீசுக்கு முன்பே அசின் பிரச்சினையில் தீர்வு ஏற்படவேண்டும் என்று தயாரிப்பு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
அசினின் இந்த விளக்கத்தை தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அசினுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
சூப்பர் சிங்கர் உடணுக்குடன் பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்...
RSS Feed
Twitter
8:52 AM
thupparithal

0 comments:
Post a Comment